நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் விஜய் ரசிகர்

நல்லவேளை... படப்பிடிப்பு முடிந்து அங்கிருந்து வெளியேறிய பின் நடந்தது. இல்லையென்றால்?” விஜய் ரசிகர்களை அதிர்ச்சியோடு இப்படி முணுமுணுக்க வைத்திருக்கிறது அந்த தீ விபத்து. ஏ.வி.எம் ஸ்டுடியோவின் 7-வது தளம் முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. தீ விபத்து ஏற்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு வரை அங்குதான் இருந்தார் விஜய்.

வேட்டைக்காரன் படப்பிடிப்பு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. ஏழாவது தளத்தில் பாடல் காட்சிக்காக பெரும் செலவில் செட்டும் போடப்பட்டிருந்ததாம். அதிகாலை மூன்று மணி வரை அங்கே இருந்து நடித்துக் கொடுத்துவிட்டு கிளம்பினாராம் விஜய். பின்பு படம் சம்பந்தப்பட்ட அனைவரும் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறிது நேரத்தில் அங்கே தீ பற்றிக் கொண்டதாம்.


பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்திருக்கிறது. சுமார் மூன்று கோடிக்கும் மேற்பட்ட பொருட்கள் நாசமாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு மேலும் தொடர வேண்டியிருப்பதால், மீண்டும் அதே போன்ற செட்டை போடுகிற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது வேட்டைக்காரன் படக்குழு.

1 comments:

ரமேஷ் விஜய் said...

இந்த இணையதளத்திள் ''இதய தளபதி'', ''இனிய தளபதி'', ''இளைய தளபதி'', விஜயை பற்றி உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

Post a Comment

Blog Widget by LinkWithin