நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் விஜய் ரசிகர்கடைசியாக வெளியான வில்லு, குருவி இரண்டும் சுமார் படங்கள். 49 வது படமான வேட்டைக்காரனை எப்படியாவது ஓட்டியாக வேண்டும்.
விஜய் அடிக்கும் அரசியல் ஸ்டண்ட் கூட வேட்டைக்காரனை ஓட வைக்க‌த்தான் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கும் அளவுக்கு வேட்டைக்காரன் வெற்றி அவருக்கு தேவைப்படுகிறது. கும்பிட போன தெய்வம் பைபாஸில் குறுக்கே வந்த மாதி‌‌‌‌ரி வேட்டைக்காரன் வெற்றிக்கு ஒரு வழி பிறந்திருக்கிறது. படத்தின் தயா‌‌‌‌ரிப்பாளர் சன் பிக்சர்சுக்கு படத்தை விற்றிருக்கிறார்.

சுமார் படங்களையே அபி‌‌‌‌ரிதமான விளம்பரத்தால் சூப்பர் ஹிட்டாக்கி பலரது வயிற்றில் அமிலத்தை அள்ளி தெ‌ளித்து வருகிறது சன் பிக்சர்ஸ். இவர்கள் வாங்கிய அயன் கண்டபடி ஓடி கலெக்ஷனில் சாதனைப் படைத்தது தெ‌ரியும். இப்போது வேட்டைக்காரனையும் இவர்களே வாங்கியிருக்கிறார்கள். எப்படி விளம்பரம் செய்வார்கள் என கற்பனை செய்வதே கடினம்.

சன் வேட்டைக்காரனை வாங்கியதால் படம் எப்படியும் ஓடிவிடும் என்ற தெம்பு விஜய்க்கு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு ஏற்பட்டிருக்கிறதோ இல்லையோ, அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
Blog Widget by LinkWithin