நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் விஜய் ரசிகர்


புதுக்கோட்டை மாவட்ட தலைமை இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதுக்கோட்டை அய்யனார் திடலில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.


’’என்னிடம் உள்ள சமூக சிந்தனை ரசிகர்களாகிய உங்களிடம் உள்ளது. உங்களிடம் உள்ள சமூக கண்ணோட்டம் என்னிடம் உள்ளது. நான் 50 ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தால் நீங்கள் 5 ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறீர்கள்.


நான் 100 ஏழை குழந்தைகளுக்கு மோதிரம் போட்டால் நீங்கள் 10 குழந்தைகளுக்கு போடுகிறீர்கள். அதே போல் பள்ளி மாணவர்களை படிக்க வைக்கிறீர்கள்.


ஏழை மாணவ, மாணவிகள் பயில இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை திறந்து வைக்கிறீர்கள். நீங்கள் செய்யும் நல்ல காரியத்தால் எனக்கும் நல்ல பெயர் வாங்கி கொடுக்கிறீர்கள்.


உங்களின் வேண்டுகோளை ஏற்று தான் இந்த இயக்கத்தை ஆரம்பித்து உள்ளேன். இந்த இயக்கத்தை தலைமை ஏற்று நடத்த ஆர்வமாக உள்ளது. நான் பிறந்த மண்ணிற்கு ஏதாவது செய்ய வேண்டும். நான் உங்களுக்கு தலைவராக இருந்து உங்களுக்காக பாடு படுவேன்’’என்று பேசினார்.கிட்ட‌த்த‌ட்ட‌ சூப்ப‌ர்சஸ்டாரின் அந்த‌ஸ்துக்கு வ‌ந்துவிட்டார் விஜ‌ய். எனினும் ம‌ருந்துக்குகூட‌ ஒரு ப‌ட‌த்திலும் கெட்ட‌ப்பை மாற்றி நடிக்காமலே ரசிகர்களின் நெஞ்சில் அதிக இடம் பிடித்தவர் நம்ம விஜய்.விஜ‌யை பேட்டியெடுக்க‌ போகும் நிருப‌ர்க‌ள் கெட்ட‌ப் ப‌ற்றி கேள்வியை கேட்காம‌ல் இருந்த‌தும் இல்லை."என‌து தோற்ற‌த்திற்கு தேவையில்லாம‌ல் கெட்ட‌ப் மாற்றி ந‌டித்தால் பொருத்த‌மாக‌ இருக்காது. க‌தைக்கு தேவைப்ப‌ட்டால் ம‌ட்டுமே ந‌டிப்பேன்" என்ற‌ ப‌தில்தான் விஜ‌ய்யிட‌மிருந்து தொட‌ர்ந்து வ‌ந்த‌து.கெட்டப்பை மாற்றி நடிப்பது என்பது அவ்வவளவு சாதரனமில்லை ஒரே மாதிரி நடிப்பது என்பது எவ்வளவு கஷ்டம் வெற்றியே காரனம் என்பது சிலருக்கு புரிவதில்லை. என‌வே த‌ன‌து 51வ‌து ப‌ட‌த்தில் புதிய‌ கெட்ட‌ப்பில் ந‌டிக்க‌ திட்ட‌மிட்டுள்ளாராம்.த‌ன‌க்கு எந்த‌ மாதிரியான‌ வேட‌ங்க‌ள் பொரு ந்துகிற‌து என்ப‌தை தெரி ந்து கொள்ள‌ ச‌மீப‌த்தில் ப‌ல‌ தோற்ற‌ங்க‌ளில் புகைப்ப‌ட‌ங்க‌ள் எடுத்து பார்த்தாராம் விஜ‌ய். இதில் மொட்டை த‌லையும் அட‌ங்கும். எடுத்த‌ சி.டி போட்டு பார்த்து சுய சோத‌னை ந‌ட‌த்திய‌பின் சில‌ தொற்ற‌ங்க‌ளீல் ந‌டிப்ப‌தென்ற‌ முடிவிற்கு வ‌ந்துள்ளாராம்.என‌வே த‌ன‌க்கு ஒத்துப்போகும் கெட்ட‌ப்புக்கு த‌குந்த‌ க‌தையை த‌யார் செய்யும்ப‌டி சில‌ இய‌க்குன‌ர்க‌ளிட‌ம் வேண்டுகோள் வைத்துள்ளாராம்.1) வேகமா யாரையோ தேடிப் போகும் போது திரும்பி ஒரு சின்ன க்ளான்ஸ் விட்டு, அவங்கதான்னு கன்ஃபார்ம் பண்ணிட்டு மறுபடியும் திரும்புவீங்களேண்ணா அது பிடிக்கும்


2) பாடல் காட்சிகளில் சத்தமே வராம லேசா உதடுகளால் முணுமுணுப்பிங்களே, அது பாட்டோடு ஒத்து வரலைன்னாலும் அந்த க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ. அதை ரசிப்போம்.

3) அப்படியே ஸ்டைலா நடந்து, ரெண்டு கைகளையும் தலைக்கு பின்னால் எடுத்திட்டு போய் முடியை கோதும்போது எல்லப் பட ஹீரோயின்களும் உங்கள பின்னாடி வந்து கட்டுபிடிப்பாங்க. அப்போ தலைகோதுவதை பாதியிலே விட்டுவிட்டு அவஙக்ள ஒரு லுக் விடுவிங்களே..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

4) படம் வெளிவரும் முன்பு வரும் ஸ்டில்களில் ’தலையை’ லேசா சாய்த்து, கீழுதட்டை கடித்துக் கொண்டு, நக்கலா பார்ப்பிங்களே. அந்த போஸை விரும்புவோம்.

5) நீங்களும், உங்க ஃப்ரெண்டுமா பைக்ல போகும்போது, பில்லியன்ல உட்கார்ந்துகிட்டு ஃப்ரெண்டு தோள்ல உங்க குழந்தை முகத்தை வைச்சிக்கிட்டு, ஒண்ணும் தெரியாத பப்பா போல போவிங்களே.. பார்த்துட்டே இருப்போம்ல..

6) சேர்ல உட்கார சீன் வந்தா, சும்மா மிடுக்கா, ஸ்டைலா, வேகமா உட்கார்ந்துட்டு சிரிச்சபடியே ஒரு லுக் விட்டுட்டு, பன்ச் டயலாக் பேசி வில்லன நக்கல் விடுவீங்களே அதாண்ணா மேட்டரு..

7) ஹீரோயினோடு சண்டை போட்டுட்டு அவங்க ரொம்ப சீரியஸா அழும்போது உதட்ட குவிச்சு, அவங்கள பார்த்து அவ்ளோதானா நீன்ற மாதிரி ஒரு லுக் விட்டுட்டு, சாரி சாரினு சொல்லுவிங்களே... ப்பா..அதுக்காகவே எல்லா ஹீரொயினையும் அழ வைக்கலாம்ப்பா..

8) மின்சார கண்ணா, வசீகரா மாதிரி சில படங்கள்ல மட்டும் வாய் ஓயாம பேசிட்டே இருப்பிங்களே. அதை கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கும் எங்களுக்கு.

9) புதியகீதைல ஒரு பாட்டுல, வில்லுல ஒரு பாட்டுல, ஸ்கிரீன்ல ரெண்டு மூனு விஜய் வரும்போது ஓவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா செய்ற சேஷ்டைகள் பார்த்திட்டே இருந்தா சாப்பாடு எதுக்கு?

10) பத்தாவது பாயிண்ட்டா எல்லாத்தையும் சொல்லலாம். உங்க காஸ்ட்யூம்ஸ், காமெடி, சண்டை. இப்படி சொல்லிட்டே போகலாம். ஆக மொத்தம் விஜய்ன்னா நாங்க ரசிப்போம்ப்பா..

பொள்ளாச்சியில் நடந்த வேட்டைக்காரன் படப்பிடிப்பில் ரசிகர்கள் விஜய்யைச் சூழ்ந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதனால் சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பு தொடர்ந்தது.


ஏவிஎம் தயாரிப்பில் விஜய் நடிக்கும் "வேட்டைக்காரன்" படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இதன் பாடல் காட்சி பொள்ளாச்சி அருகே படமாக்கப்பட்டது.

50க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் பங்கேற்ற இந்தப் படப்பிடிப்பில் விஜய்யைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் படப்பிடிப்புத் தளத்தில் குவிந்துவிட்டனர்.

படப்பிடிப்பு இடைவேளையின்போது, நடிகர் விஜய்யை சூட்டிங் பார்க்க வந்த ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.

அவருடன் கைகுலுக்க, ஆட்டோகிராப் வாங்க, சந்தித்துப் பேச ஏகப்பட்ட ரசிகர்கள் ஒர் நேரத்தில் முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

இதனால் விஜய்யை பாதுகாப்பு வளையம் அமைத்து அழைத்துச் செல்ல வேண்டியதாகிவிட்டது. அப்போதும் விடாமல், விஜய்யை சிலர் நெருக்கியடித்ததால், ரசிகர்களுக்கும் விஜய்யின் பாதுகாவலர்களுக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. பின்னர் ரசிகர்கள் கலைந்து சென்றனர்.


பராசக்தி படத்தில் வந்த பிரபலமான நீதிமன்ற காட்சியையும் வசனத்தையும் விவேக் ஒரு படத்தில் நகைச்சுவையாக மாற்றியிருப்பார். அதே மாதிரி நம் தளபதியை பாராட்டி விவேக் பேசினால் எப்படி இருக்கும்? இதோ.


விஜய் - வெற்றிகரமான பெயர்

படிப்பு வரலேன்னா நடிப்பு வரும்

சினிமாக்காரர் மகன்களின் தலைவிதிக்கு

இவர் மட்டும் விதிவிலக்கா?

லயோலாவில் படித்த இவர் லவ்டூயட் பாட நினைத்தான்

விஸ்காம் படித்த இவர் வில்லன்களை வேட்டையாட நினைத்தான்

விட்டார்களா அவரது வீட்டில்?

ஓடினார்.. உதயம் தியேட்டர் ஓடினான்

அண்ணாமலை பார்க்க ஓடினான்

பாட்ஷாவை பார்க்க ஓடினான்

நாயகனை பார்க்க ஓடினான்

ஓடினான் ஓடினான் கோடம்பாக்கம் வரை ஓடினான்

அவன் ஓட்டத்தை போக்கி இருக்க வேண்டும்

சினிமா வாட்டத்தை புரிந்திருக்க வேண்டும்

வாழ்க்கை பாட்டத்தை மாற்றி இருக்க வேண்டும்.

ஒரு வழியாய மனம் மாறிய SAC

கொண்டார் மனதில் பூரிப்பு

அதுதான் நாளையத் தீர்ப்பு

சினிமா.. அவனை

சரிமா என்று ஏற்றுக் கொண்டது

அவன் திறமைகளை திரை இட்டு வெற்றிக் கண்டது

காதல் படம் நடித்தான்... ஓடியது

குடும்ப படம் நடித்தான்... ஓடியது

காமெடி படம் நடித்தான்... ஓடியது

ஆக்‌ஷன் படம் நடித்தான்... ஓடியது

ஓடியது ஓடியது.. அவன் நடித்த

எல்லாப் படங்களும் ஓடியது.

நீங்கள் கேட்கலாம்.

உனக்கேன் அக்கறை? யாருக்குமில்லாமல்

உனக்கேன் அக்கறை? விஜயை பற்றி பாராட்ட.

ரசித்தேன்.. நானே ரசித்தேன்..

நடனத்தை ரசித்தேன்

நகைச்சுவையை ரசித்தேன்

நவரசத்தை ரசித்தேன்

நரம்பு புடைக்கும் பன்ச் வசனத்தையும் ரசித்தேன்.

அதனால்தான் சொல்கிறேன் இவன் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று..ஆண்டு படம் பாத்திரம் துணை நடிகர் இயக்குனர் குறிப்புகள்

2009 வேட்டைக்காரன் பாபு சிவன்,AVM Productions
2009 வில்லு புகழ் நயன்தாரா பிரபு தேவா
2008 குருவி' வெற்றிவேல் திரிஷா, விவேக் தரணி மே 3, 2008 இந்திய வெளியீடு.
2007 அழகிய தமிழ் மகன் குரு/பிரசாத் சிரேயா, நமிதா பரதன்
2007 போக்கிரி சத்தியமூர்த்தி/தமிழ் அசின், முமைத் கான் பிரபு தேவா தெலுங்குத் திரைப்படம் போக்கிரியில் இருந்து மீளுருவாக்கப்பட்டது.
2006 ஆதி ஆதி திரிஷா ரமணா Athanokkade தெலுங்குத் திரைப்படத்தின் மீளுருவாக்கம்.
2005 சிவகாசி முத்தப்பா/சிவகாசி அசின், நயன்தாரா பேரரசு
2005 சுக்கிரன் சுக்கிரன் ரவி கிருஷ்ணா, நடாஷா, ரம்பா எஸ்.ஏ.சந்திரசேகர் சிறப்புத் தோற்றம்
2005 சச்சின் சச்சின் ஜெனிலியா, பிபாசா பாசு, Linda Arsenio ஜான் மகேந்திரன்
2005 திருப்பாச்சி சிவகிரி திரிஷா, மல்லிகா பேரரசு அன்னாவரம் என்ற பெயரில் தெலுங்கில் மீளுருவாக்கப்பட்டது.
2004 மதுர மதுரைவேல் சோனியா அகர்வால், ரக்ஷிதா, தேஜாஸ்ரீ ஆர். மாதேஷ்
2004 கில்லி சரவணவேலு/கில்லி திரிஷா தரணி தெலுங்குத் திரைப்படம் ஒக்கடுவின் மீளுருவாக்கம்
2004 உதயா உதயக்குமரன் சிம்ரன் அழகம் பெருமாள்
2003 திருமலை திருமலை ஜோதிகா ரமணா Remade into Gowri
2003 புதிய கீதை சாரதி மீரா ஜாஸ்மின், அமிஷா பட்டேல் கே. பி. ஜெகன்
2003 வசீகரா பூபதி சினேகா கே. செல்வபாரதி தெலுங்குத் திரைப்படம் Nuvva Naaku Nachav-ன் மீளுருவாக்கம்.
2002 பகவதி பகவதி ரீமா சென் ஏ. வெங்கடேஷ்
2002 யூத் சிவா சந்தியா, சிம்ரன் வின்சென்ட் செல்வா
2002 தமிழன் சூர்யா பிரியங்கா சோப்ரா ஏ. மஜீத்
2001 ஷாஜகான் அசோக் ரிச்சா பல்லோடு, மீனா ரவி
2001 பத்ரி பத்ரி பூமிகா, மோனல் அருண் பிரசாத் தெலுங்குத் திரைப்படம் Tammuduவின் மீளுருவாக்கம்.
2001 பிரெண்ட்ஸ் அரவிந்த் தேவயானி ,சூர்யா சித்திக் Remade from Malayalam, Dubbed into Telugu as Deviputrulu [1]
2000 பிரியமனவளே விஜய் சிம்ரன் கே. செல்வபாரதி Remade from Telugu film Pavithrabandham
2000 குஷி சிவா ஜோதிகா, சில்பா செட்டி எஸ். ஜே. சூர்யா remade into Telegu as Khushi, and remade into Hindi as Khushi
2000 கண்ணுக்குள் நிலவு கௌதம் சாலினி பாசில்
1999 மின்சாரக் கண்ணா கண்ணன் ரம்பா கே. எஸ். ரவிக்குமார்
1999 நெஞ்சினிலே கருணாகரன் இசா கோபிகர் எஸ்.ஏ.சந்திரசேகர்
1999 என்றென்றும் காதல் விஜய் ரம்பா மனோஜ் பட்னாகர்
1999 துள்ளாத மனமும் துள்ளும் குட்டி சிம்ரன் S. எழில் remade in telugu as nuvachavani
1998 நிலாவே வா சிலுவை சுவலட்சுமி ஏ. வெங்கடேசன்
1998 பிரியமுடன் வசந்த் கௌசல்யா வின்சென்ட் செல்வா
1998 நினைத்தேன் வந்தாய் கோகுல கிருஷ்ணன் தேவயானி, ரம்பா கே. செல்வபாரதி
1997 காதலுக்கு மரியாதை ஜீவானந்தம் சாலினி பாசில் Remade from Malayalam film Aniyathipraavu
1997 நேருக்கு நேர் விஜய் சூர்யா, சிம்ரன், கௌசல்யா வசந்த்
1997 ஒன்ஸ் மோர் விஜய் சிம்ரன், சிவாஜி கணேசன் எஸ்.ஏ.சந்திரசேகர்
1997 லவ் டுடே கனேஷ் சுவலட்சுமி பாலசேகரன்
1997 காலமெல்லாம் காத்திருப்பேன் கண்ணன் டிம்ப்பல் ஆர். சுந்தர்ராஜன்
1996 செல்வா செல்வா சுவாதி ஏ. வெங்கடேசன்
1996 மாண்புமிகு மாணவன் சிவா கீர்த்தனா எஸ்.ஏ.சந்திரசேகர்
1996 வசந்த வாசல் சுவாதி M. R. Sachudevan
1996 பூவே உனக்காக ராஜா சங்கீதா, அஞ்சு அரவிந்த் விக்ரமன்
1996 கோயம்புத்தூர் மாப்ளே சங்கவி சி. ரெங்கனாதன்
1995 சந்திரலேகா ரகீம் வனிதா விஜய்குமார் நம்பிராஜன்
1995 விஷ்ணு விஷ்ணு சங்கவி எஸ்.ஏ.சந்திரசேகர்
1995 ராஜாவின் பார்வையிலே விஜய் இந்திரஜா, அஜித் ஜானகி சௌந்தர் Dubbed into Telugu as Yuva Raktam
1994 தேவா தேவா சுவாதி எஸ்.ஏ.சந்திரசேகர்
1994 ரசிகன் விஜய் சங்கவி எஸ்.ஏ.சந்திரசேகர்
1993 செந்தூரப்பாண்டி விஜய் யுவராணி எஸ்.ஏ.சந்திரசேகர்
1992 நாளைய தீர்ப்பு விஜய் கீர்த்தனா எஸ்.ஏ.சந்திரசேகர் அறிமுகம்நன்றிகள் விக்கிப்பீடியாவிற்கு

வேட்டைக்காரன் பாடல் தரவிறக்கம் செய்ய:-


வேட்டைக்காரன் பாடல் தரவிறக்கம் செய்ய:-இங்கே கிளிக்கவும்
Blog Widget by LinkWithin