
பொள்ளாச்சியில் நடந்த வேட்டைக்காரன் படப்பிடிப்பில் ரசிகர்கள் விஜய்யைச் சூழ்ந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பு தொடர்ந்தது.
ஏவிஎம் தயாரிப்பில் விஜய் நடிக்கும் "வேட்டைக்காரன்" படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இதன் பாடல் காட்சி பொள்ளாச்சி அருகே படமாக்கப்பட்டது.
50க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் பங்கேற்ற இந்தப் படப்பிடிப்பில் விஜய்யைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் படப்பிடிப்புத் தளத்தில் குவிந்துவிட்டனர்.
படப்பிடிப்பு இடைவேளையின்போது, நடிகர் விஜய்யை சூட்டிங் பார்க்க வந்த ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.
அவருடன் கைகுலுக்க, ஆட்டோகிராப் வாங்க, சந்தித்துப் பேச ஏகப்பட்ட ரசிகர்கள் ஒர் நேரத்தில் முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இதனால் விஜய்யை பாதுகாப்பு வளையம் அமைத்து அழைத்துச் செல்ல வேண்டியதாகிவிட்டது. அப்போதும் விடாமல், விஜய்யை சிலர் நெருக்கியடித்ததால், ரசிகர்களுக்கும் விஜய்யின் பாதுகாவலர்களுக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. பின்னர் ரசிகர்கள் கலைந்து சென்றனர்.
0 comments:
Post a Comment