நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் விஜய் ரசிகர்


பராசக்தி படத்தில் வந்த பிரபலமான நீதிமன்ற காட்சியையும் வசனத்தையும் விவேக் ஒரு படத்தில் நகைச்சுவையாக மாற்றியிருப்பார். அதே மாதிரி நம் தளபதியை பாராட்டி விவேக் பேசினால் எப்படி இருக்கும்? இதோ.


விஜய் - வெற்றிகரமான பெயர்

படிப்பு வரலேன்னா நடிப்பு வரும்

சினிமாக்காரர் மகன்களின் தலைவிதிக்கு

இவர் மட்டும் விதிவிலக்கா?

லயோலாவில் படித்த இவர் லவ்டூயட் பாட நினைத்தான்

விஸ்காம் படித்த இவர் வில்லன்களை வேட்டையாட நினைத்தான்

விட்டார்களா அவரது வீட்டில்?

ஓடினார்.. உதயம் தியேட்டர் ஓடினான்

அண்ணாமலை பார்க்க ஓடினான்

பாட்ஷாவை பார்க்க ஓடினான்

நாயகனை பார்க்க ஓடினான்

ஓடினான் ஓடினான் கோடம்பாக்கம் வரை ஓடினான்

அவன் ஓட்டத்தை போக்கி இருக்க வேண்டும்

சினிமா வாட்டத்தை புரிந்திருக்க வேண்டும்

வாழ்க்கை பாட்டத்தை மாற்றி இருக்க வேண்டும்.

ஒரு வழியாய மனம் மாறிய SAC

கொண்டார் மனதில் பூரிப்பு

அதுதான் நாளையத் தீர்ப்பு

சினிமா.. அவனை

சரிமா என்று ஏற்றுக் கொண்டது

அவன் திறமைகளை திரை இட்டு வெற்றிக் கண்டது

காதல் படம் நடித்தான்... ஓடியது

குடும்ப படம் நடித்தான்... ஓடியது

காமெடி படம் நடித்தான்... ஓடியது

ஆக்‌ஷன் படம் நடித்தான்... ஓடியது

ஓடியது ஓடியது.. அவன் நடித்த

எல்லாப் படங்களும் ஓடியது.

நீங்கள் கேட்கலாம்.

உனக்கேன் அக்கறை? யாருக்குமில்லாமல்

உனக்கேன் அக்கறை? விஜயை பற்றி பாராட்ட.

ரசித்தேன்.. நானே ரசித்தேன்..

நடனத்தை ரசித்தேன்

நகைச்சுவையை ரசித்தேன்

நவரசத்தை ரசித்தேன்

நரம்பு புடைக்கும் பன்ச் வசனத்தையும் ரசித்தேன்.

அதனால்தான் சொல்கிறேன் இவன் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று..

0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin