
புதுக்கோட்டை மாவட்ட தலைமை இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதுக்கோட்டை அய்யனார் திடலில் நடைபெற்றது.
விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
’’என்னிடம் உள்ள சமூக சிந்தனை ரசிகர்களாகிய உங்களிடம் உள்ளது. உங்களிடம் உள்ள சமூக கண்ணோட்டம் என்னிடம் உள்ளது. நான் 50 ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தால் நீங்கள் 5 ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறீர்கள்.
நான் 100 ஏழை குழந்தைகளுக்கு மோதிரம் போட்டால் நீங்கள் 10 குழந்தைகளுக்கு போடுகிறீர்கள். அதே போல் பள்ளி மாணவர்களை படிக்க வைக்கிறீர்கள்.
ஏழை மாணவ, மாணவிகள் பயில இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை திறந்து வைக்கிறீர்கள். நீங்கள் செய்யும் நல்ல காரியத்தால் எனக்கும் நல்ல பெயர் வாங்கி கொடுக்கிறீர்கள்.
உங்களின் வேண்டுகோளை ஏற்று தான் இந்த இயக்கத்தை ஆரம்பித்து உள்ளேன். இந்த இயக்கத்தை தலைமை ஏற்று நடத்த ஆர்வமாக உள்ளது. நான் பிறந்த மண்ணிற்கு ஏதாவது செய்ய வேண்டும். நான் உங்களுக்கு தலைவராக இருந்து உங்களுக்காக பாடு படுவேன்’’என்று பேசினார்.
0 comments:
Post a Comment