நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் விஜய் ரசிகர்


காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியுடன் நடிகர் விஜய் சந்தித்து பல மணி நேரம் உரையாடினார். தமிழ்நாட்டில் இளைஞர்காங்கிரசை வலுப்படுத்தும் நோக்கத்தில் ராகுல்காந்தியின் உத்தரவுப்பட இளைஞர்காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்ப்புப்பணியில் தமிழக காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அதே நேரம் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜய் தமிழகத்தின் அனைத்துபகுதிகளிலும் மன்றங்களை நடடித்திவருகிறார்.அண்மையில் புதுச்சேரியில் விஜய் மக்கள் இயக்கத்;தை தொடங்கிவைத்து பேசிய விஜய் தான் அரசியலில் வர ஆர்வமாக இருப்பதாகவும் ஆனால் யோசித்து அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் ராகுல்காந்தியின் விஜயினை சந்திக்க நேரம் ஒதுக்கி டெல்லிவரச்சொல்ல சந்தித்துள்ளார். டெல்லியில் அவர் இருவரும் நீண்ட நேரம் அரசியல் பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து விஜயின் அரசியல் பிரவேசத்துக்கு உந்து சக்தியாக செயல்படும் அவரின் தந்தை சந்திரசேகரர் விஜய்-ராகுல் சந்திப்பு குறித்து கூறுகையில்.

''விஜய்க்கு ராகுல் காந்தி அபாய்ன்மெட்ன் கொடுத்திருந்தார். ஒரு மிகப்பெரிய கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியுடன் விஜய் நீண்ட நேரம் சந்தித்து பேசிய மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது.” ஏன்றார்.

இந்த சந்திப்புக்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் தான் தீவிர முயற்சி எடுத்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்ற சொல்லப்படுகிறது. ''நடிகர் விஜயுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பேசியது. தமிழகத்தில் காங்கிரசினை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்று. தமிழகத்தில் காங்கிரசினை பலப்படுத்த வேண்டும் என்பதில் ராகுல் தீவிரமாக இருக்கிறார்.

ராகுல் - விஜய் சந்திப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் நல்ல அறிவிப்பினை சம்பந்தப்பட்டவர்கள் வெளியிடுவார்கள்.'' ஏன்றனர் தமிழக காங்கிரஸ் கட்சியினர்.

விஜயின் இந்த சந்திப்பு தமிழகத்தில் காங்கிரஸின் அரசியல் கணக்கை மாற்றி அமைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். தமிழகத்தில் இளைஞர் காங்கிரசினை விஜய் தலைமையில் வலுப்படுத்த காங்கிரஸ் தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin