நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் விஜய் ரசிகர்
அஜித் இயக்குனர் சரனுடன்(சரனுக்கு சனி உச்சத்தில் போல...) கதை(அப்படின்னா?) விவாதத்தில் இருக்கிறார்...)

அஜித் : சரன்-ஜி நல்ல ஒரு remake கதை இருந்தா சொல்லுங்க...

சரன் : (அது என்ன remake கதை...சுட்ட கதைனு சுத்த தமிழ்ல சொல்லமாட்டீங்களோ...?விஜய் கூட பரவாயில்ல தெலுங்கிலயிருந்துதான் remake பண்ணுறான்...நீ என்னடா தமிழ் படத்தையே சுடுறா...)
உங்களுக்கு சுட்ட கதைதான வேணும்...பாட்டி வடை சுட்ட கதை okவா...?

அஜித் : என்னை வச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலயே...

சரன் : (உங்கள வச்சு என்ன பண்ணினாலும் அது காமெடியாத்தான் இருக்கும்...)
சாச்...சா...நாங்க பாட்டி வடை சுட்ட கதைய சுடப்போறம்...

அஜித் : அப்ப இதில் பாட்டி வடைக்குப் பதிலா pizza...burgerனு சுட்டா styleishஆ இருக்கும்ல...

சரன் : (அடே...நீ பில்லா படத்துக்கப்புறம் செய்யுறது இரண்டே விஷயம்தான்... ஒன்னு எப்ப பார்த்தாலும் கோட் ஷுட்டோட அலையிறது...மற்றது எதுக்கெடுத்தாலும் இந்த styleish என்ட வார்த்தைய சொல்றது...இதை மாத்த மாட்டாயாடா நீ...?)
இதில வாற பாட்டி பல்லுப்போன பாட்டி இல்ல...வைரக்கல் பார்ட்டி...அவன் ஒரு வைரக்கல்ல சுடுரான்...

அஜித் : அப்ப பாட்டி கரட்டரில் வில்லன்...காக்கா கரட்டரில் நானா...? விஜய்க்கு குருவி...அப்ப எனக்குக் காக்காவா? நீங்களும் ஏன் எனக்கு ஆப்பு அடிக்கிறீங்க ஜி...?

சரன் : இதில் main வில்லன்தான் காக்கா...நீங்க நரி...பார்ட்டி சுட்ட வைரத்த main வில்லன் சுட்டுட்டு வெளிநாடு தப்பிப் போறான்...அவன பிடிக்க நீங்க வெளிநாடு போறீங்க...

அஜித் : ஓ...அப்ப நானும் குருவி விஜய் மாதிரி பறந்தே வெளிநாடு போறனா...?

சரன் : (டே...இது உனக்கே overறா இல்ல...?
விஜய்க்காவது slim body...அதுக்கே இவ்வளவு விமர்சனம்...
உன்னோட தொப்பை sizeக்கும் புவி ஈர்ப்பு விசைக்கும் கணக்குப்போட்டு பார்த்தால்... தாங்காதடா சாமி...டே...டே இந்த படத்தையும் காமெடி படமாக்கப்போறியா...?)
அவன பிடிக்க நீங்க flightல வெளிநாடு போறீங்க...
இதிலதான் interval...

(interval எதுக்குன்னா...இவ்வளவு நேரம் படம் பார்த்து கடுப்பாகியதுக்கும்...இனி பார்த்து கடுப்பாக தயாராகிறதுக்கும்...)
இனித்தான் உங்களின் ராச்சியம் ஆரம்பம்...இனி நீங்க நடிக்கப்போவது பெண் வேடத்தில்...(நடிக்கவே தேவையில்லயே...அப்படியே இருந்தாலே போதுமே...)

அஜித் : action படம்ன்னு நினைத்தேன்...இப்படி காமெடி பண்ணுறீங்களே ஜி...

சரன் : இல்ல...இதில உங்களுக்கு நரி கரட்டரா...அதுதான் தந்திரமா வில்லன வீழ்த்துறீங்க...பெண் வேடம்ன்னதால நீங்க தொப்பைய குறைக்கனும்...
கஸ்டம்தான்...இருந்தாலும் கொஞ்சம் try பண்ணுங்க...தொப்பைய குறைக்காட்டா pregnant lady மாதிரி இருக்கும் ஆமா சொல்லிட்டன்...

அஜித் : ok ஜி...அப்புறம் படத்தில் ஏதாவது punch dialog இருக்கா...?

சரன் : ஆமா......நாங்க அடிக்கிற ஆப்பு ரொம்ப ரொம்ப sharp-pu...

அஜித் : இதை எங்கேயோ கேட்டமாதிரி இருக்கே...?

000 : தெரியுதில்ல...பொம்பளை வேடம் போட்டாலும் உங்களுக்கு குஞ்சு (சத்தியமா double meaningல ஒண்ணும் சொல்லல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்......நம்புங்க) dialog வேணும் punch dialog வேணும்...

அஜித் : இல்ல எனக்கு வேணும்(அடம்பிடிக்கிறானே)...வேணும்னா என்னோட பழைய punch dialogக remake பண்னுவமா...?

000 : அடப்பாவி...punch dialogயும் remake பண்ணுற அளவுக்கு பஞ்சம் வந்திட்டா...? எந்த dialog அப்பு...?

அஜித் : நான் தனி ஆள் இல்ல...

000 : super...இதை இப்பிடி மாத்துவம்...நான் single ஆள் இல்ல...double ஆள்...வெளியதான் பொண்ணு...உள்ள gunனு...( எதை சொல்றீங்க...?)

இனி climax...(அப்பாடி...ஒரு முடிவுக்கு வந்தாச்சு...அஜித் படம் இனி பார்க்குறதில்லை என்ட முடிவுக்கில்லைங்க...படத்தோட முடிவுக்கு...)


அஜித் : climaxஐ நான் சொல்றன்...வில்லன் என்ன பார்த்து நீ ஒரு பெண்ணான்னு கேட்கிறான்...அதுக்கு நான்...ஆடத்தெரியலன்னா ஆடிக்காட்டலாம்...பாடத்தெரியலன்னா பாடிக்காட்டலாம்...பெண்ணான்னு கேட்டா...பாடிதான் காட்டனும்...

(நான் வரலாறு பட கரட்டரதான்டா சுட்டன்...நீ dialog முதல் கொண்டு சுடுறியேடா...)
அடப்பாவி...அப்ப பெண் குரல்ல பாடப்போறியா...பாடித்தான் இவ்வளவு நாளா கொல்லல...அதையும் இனி செய்யலாம்னு முடிவு பண்ணிட்டியா...

அஜித் : பாட்டு பாடிக்காட்டல...பாடிய(body) காட்டப்போறன்...

சரன் : (எப்படியாவது கொல்லுறதின்னு முடிவு பண்ணிட்டா...)
அப்ப என்னோட படத்துக்கு "A" சான்றிதல் வாங்கி தாறதா முடிவு பண்ணிட்டீங்களா...?

அஜித் : இந்த படத்திலயாவது என்னோட பாடிய(body) காட்ட விடுங்க...
வில்லன் மனம் திறந்து செய்த தவறை ஒப்புக்கொண்டு வைரத்த என்னிடம் ஒப்படைக்கிறான்...

சரன் : நீங்க இப்படி திறந்த மேனியா நின்னா மனம் திறக்க மாட்டான்...உயிரைத்தான் திறப்பான்...climax வித்தியாசமா இருக்கும்...தமிழ் சினிமாவிலயே இப்பிடி ஒரு climax வந்ததில்ல...வரலாறு படத்த விட ஒரு படி மேல போய் வரலாறு காணாத வெற்றி அடையும்...

அஜித் : இப்படித்தான் கதை சொல்லும்போது சொல்லுறாங்க...ஆனா படம் வந்தா முதல் நாளோட சரி...அப்புறம் ஈ...காக்கா கூட தியட்டர் பக்கம் வாறதில்ல...ஜி......
என்ன ஜி...படத்துக்கு பெயர் இன்னும் சொல்லலயே...?

சரன் : (அது ஒன்னுதான் இப்ப இல்லாத குறை...)நீங்க நரி கரட்டரில் அசத்தலா(9-நவரசம்) நடிக்கிறதால படத்தோட பெயர் ...நசல்...

[இந்த படம் எப்ப release செய்யலாம்னு ஜோசியரிடம் கேட்ட போது அடுத்த சித்திரை புத்தாண்டுக்கு release செய்யலாம்ன்னு சொன்னாரு...அப்ப இந்த ஆண்டு மட்டுமல்ல அடுத்த ஆண்டும் தமிழனுக்கு விரோதி ஆண்டுதான்...]

[விட்டிடுவமா... அதுக்கடுத்த சித்திரை புத்தாண்டுக்கு நசல் 2011ன்னு இதையே remake பண்ணுவம்...அதுக்கடுத்த சித்திரை புத்தாண்டுக்கு நசல் 2011 part-2ன்னு மறுபடியும் remake பண்ணுவம்...

அடப்பாவிங்களா...தமிழ் சினிமா பாவம்டா...விட்டிடுங்கடா...டேய்...டேய்...]

0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin