நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் விஜய் ரசிகர்
பாப்பைய்யா: அன்புத்தாய்மார்களே.. அருமை பெரியோர்களே... இனிய குழந்தைகளே.. காலை வணக்கம்.. போன நிகழ்ச்சிலே தம்பி விஜய்ய பார்த்தோம்.. அப்ப இந்த வாரம் யாருனு நான் சொல்ல வேணாம்லே.. விஜய்னா அடுத்து இவர் தானே.. வாங்க..



தல போல வருமா, தல போல வருமா, தல போல வருமா பாட்டு ஒலிக்க, ஒருவர் வேகமாக நடந்து வருகிறார்..


பாப்பைய்யா: யாருய்யா நீயு... விருந்தினர் வர நேரத்துல அவர் பாட்டுக்கு உள்ளார வந்துட்ட..


அஜித்: அண்ணே... என்ன நல்லா பாருங்கனே... நான் தான் அஜித்..


பாப்பைய்யா: ஓ.. கோட்-சூட் இல்லாம,வேட்டில வந்துட்டியா?? அதான் கண்டுபிடிக்க கஷ்டமாயிடிச்சி..


டீ.ஆரு: நீ போட்டு வந்ததோ வேட்டி.
சினிமாவில் உனக்கும் விஜய்க்கும் தான் போட்டி


பாப்பைய்யா: டீ.ஆரு.. நீ ரொம்ப தான்யா நாட்டி..(NAUGHTY) ஷோவே இப்ப தான் ஆரம்பிச்சிருக்கு.. அதுக்குள்ள முற்றும் போட வச்சிடுவ போல இருக்கே.. நிறுத்துய்யா..


கவுண்டரு: டேய்.. கூலிங்-க்ளாஸ் கண்ணா.. அது என்னடா நீ பெருசா சாதிசிட்ட மாதிரி தல போல வருமா? இவரு தான் அணு-விஞ்ஞானி... சந்திரனுக்கு ராக்கெட் விட்டாரு.. ஆனா மகனே.. மொக்க படமா நடிச்சி தள்றதுல உன்ன போல யாரும் வர முடியாது...


அஜித்: அண்ணே.. அந்த வில்லு நடிகரை மறந்துடீங்களா?


பாப்பைய்யா: அவரு படம்னா கூட பாட்டு, காமெடினு ஏதோ கொஞ்சம் பாக்குற மாதிரி இருக்குய்யா.. ஆனா உன் படத்துல பாட்டும் மொக்க.. உன் நடிப்பு தவிர வேற காமெடியே இல்லயே.. ஏன்யா??



டீ.ஆரு: சரி.. கடசியா உனக்கு ஹிட் ஆன படம் என்ன?


அஜித்: ஏகன் நீங்க பாக்கலையா??


கவுண்டரு: டேய் அதெல்லாம் படமாடா? உன் ஃபேன்ஸாலேயே பாக்க முடில.. என் மாப்பு சத்யராஜ் கூட்டிட்டு போனான்டா.. ஷோ முன்னாடி அடிச்ச குவார்ட்டர் போதையே போச்சு.. காமெடிங்கற பேருல நீ அடிச்ச அக்கப்போர் இருக்கே.. ராமா ராமா...



அஜித்: அண்ணே.. ஒப்பனிங் கலெக்‌ஷன் தெரியுமா?? என் பில்லா விட அதிகம்... அது..



பாப்பைய்யா: எதுய்யா?? உன் படம் ஒப்பனிங்லா நல்லா தான் இருக்கு.. ஃபினிசிங் சரியில்லையே.. முதல் வாரம் ஏதோ ஃபேன்ஸ் தயவாலே ஓடிச்சி.. அடுத்த வாரம் படம் படுத்துகிச்சி.. ஏதோ தல பாவமேனு, உன் ஃபேன்ஸே நெஞ்ச கல்லாக்கிட்டு, கஷ்டப்பட்டு போய் படம் பார்த்தாங்க...



டீ.ஆரு: நீ நடிச்சதோ ஏகன்.. அதுனால தியேட்டருல அடிச்சாங்க பேகான்..


கவுண்டரு: யோவ்.. யாருய்யா இவன உள்ள விட்டது.. இங்க நாம என்ன
பேசிட்டு இருக்கோம்.. இவன் என்ன பேசுறான்?? அடடடடடடடடடடடா..


அஜித்: ஹே ஃபூல்.. பீ கூல்.. (HEY FOOL, BE COOL)


கவுண்டரு: அட்ரா சக்க.... அட்ரா சக்க, அட்ரா சக்க, அட்ரா சக்க.


அஜித்: சரிண்ணே.. பில்லா படத்துல நான் நல்ல நடிச்சேன்ல?


பாப்பைய்யா: நீ நல்லா நடிச்சனு சொல்றத விட நல்லா நடந்தய்யா.. அப்டி இருந்தும் உன் தொப்பை குறையலையே... டான் கதையில புள்ளி மான் மாதிரி, அழகா ராம்ப் வாக் பண்ணிட்ட.. ஆனா உன்ன விட நயந்தாரா பிகினி சூப்பருலே.. அதுக்காகவே 2 வாட்டி பார்த்தேன்ல..



டீ.ஆரு: படம் ரிப்பீட் ஆடியன்ஸே அதுக்காக தான்ங்க... அவனவன் செலவு பண்ணி 2 நிமிசம் விளம்பரப்படம் எடுப்பானுங்க... ஆனா இரண்டரை மணிநேரம் கூலிங்க்ளாஸ்க்கும், கோட்-சூட்டுக்கும் விளம்பரமா எடுத்த படம் தான் பில்லா..



கவுண்டரு: ஹே.. ஓல்ட் மேன்.. நீ கரெக்டா சொன்ன.. அது கூட விட்டுடு.. சேவல் கொடி பறக்குதய்யா பாட்டுல எல்லாரும் மஞ்சள் துணி கட்டி ஆடிட்டு இருக்க, நீ மட்டும் சம்பந்தம் இல்லாம, ஜீன்ஸ்-பேண்ட், டீ-ஸர்ட்ல வந்த.. சரி.. பையன் ஆடுவானே நானும் முத வரில இருந்து பாக்குறேன்.. ம்ம்ம்ம்ம்..


அஜித்: அண்ணே.. பக்தி பரவசத்துல அப்டி வந்துட்டேன்னே... நான் தல.. அவ்வளவு பேருல நான் வித்தியாசமா தெரியணும்ல.. அதான்..


பாப்பைய்யா: நீ தான் டான்ஸே ஆட மாட்டேலே.. அதுல இருந்தே கண்டுபிடிச்சிடலாம் நீ தான் அஜித்னு.. பிறவு என்ன??


கவுண்டரு: டேய்.. என்ன அண்ணேனு கூப்டாத... ஏற்கனவே ஒரு அண்டா தலையன் என்ன அண்ணே அண்ணே கூப்டு ஏகப்பட்ட பிரச்சனைகள், ரோதனைகள், வேதனைகள் கொடுத்துட்டான்.. இப்ப புதுசா நீ வேறயா?? ஒடி போய்டு படுவா..



பாப்பைய்யா: அதே படத்துல செய் ஏதாவது செய்னு ஒரு சாங்க் இருக்கு.. அந்த பொண்ணு சிலுக்கு மாதிரி இல்லனாலும் மிலுக்கு மாதிரி இருந்தாலே.. அவ்வளவு உணர்ச்சியோட ஆடுறா... கழுத்துல சுளுக்கு வந்த மாதிரி இப்டி, அப்டி திருப்பிட்டு இருக்கய்யா... அப்றோம் முகத்துல வேற மலச்சிக்கல் வந்த மாதிரி ஒரு எக்ஸ்பிரஸ்ஸன்.. ஏன் தம்பி?? விளங்குமா??



டீ.ஆரு: ஆமாங்க.. இதுக்கு நானே ஆடி இருப்பேனே.. இதே மாதிரி கோட்-சூட் போட்டு, என்ன காதலிக்க ஓராயிரம் பேர் இருக்காங்கனு மும்தாஜ் கூட அட்டகாசமாக, காதல் ரசம் சொட்ட ஆடியவன் தான் இந்த டீ.அர்.


அஜித்: நீங்க ஆடுனா அது பேரு பில்லா இல்ல... பெ....


பாப்பைய்யா: வேணாம்யா... நீ அவர மாதிரி ரைமிங்கா சொல்றேனு ஒண்ணுகிடக்க சொல்ல, அவருக்கு கோவம் வந்து, தமிழன்யா.. அப்ரெஸ், டிப்ரெஸ்னு கத்திட்டு இருப்பாரு..



அஜித்: பெரிய குல்லா மாதிரி இருக்கும்னு சொல்ல வந்தேன்...

கவுண்டரு: இதே மாதிரி தான் ஓல்ட்-மேன், இவரு பரமசிவன்னு ஒரு படத்துல நடிச்சாரு.. அந்த கதையில அப்டி என்னத்த இவரு கண்டாரு தெரில. அதுல ஜெயில்ல ஒரு பாட்டு வரும்.. ஆச தோச.. அப்பள வடனு.. சம்பந்தமே இல்லாம உள்ள வந்து..


அஜித்: அண்ணே.. அது என் INTRODUCTION..


டீ.ஆரு: (விஜய் குரலில் மிமிக்ரி) ஹேஹேஹேஹே.. பேசிட்டு இருக்கோம்ல... சைலன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. (SILENCE) SORRY FOR THE INTERRUPTION, DURING THE CROSS EXAMINATION, YOU CAN SEE THE ACTION COME DIRECTION, ADDED WITH PERFECTION, IN THE NAME OF WITNESS YOU ARE PLAYING WITH LIMITATIONS



பாப்பைய்யா: DON’T PLAY WITH EMOTIONS!! எங்களால முடிலய்யா.. ஷோ நல்லா தானே போய்கிட்டு இருக்கு.. உனக்கு டயலாக் வேணும்னா டைரக்டர் கிட்ட கேளுய்யா.. ஏன் இப்டி நடுவுல? கவுண்டரு நீ பேசுய்யா...



டீ.ஆரு: டேய் ஆப்பிரிக்கன் அங்கிள்.. இன்னொரு வாட்டி நடுவுல வந்த, அப்டியே அப்பி புடுவேன்.. ஆங் எங்க விட்டேன்.. சம்பந்தமே இல்லாம உள்ள வந்து, புள்ள குளிக்காம, பல்லு விளக்காம, அட முடி கூட வாராம, எழுந்து வந்து, நானும் ஆடுறேங்கற பேருல கரண்ட்-ஷாக் அடிச்ச மாதிரி குதிப்பான் பாருங்க.. நான் பயந்துட்டேன்.. கடசிலே அந்த பொண்ணுக்கு எச பாட்டு பாடுறேன்னு, ஆங் ஆஆங் ஆஆங்னு சாப்ட அப்பளம், வட செரிக்காம ஏப்பம் வுட்டுட்டு இருப்பான் பாருங்க.. பயங்கர கொடும...



பாப்பைய்யா: பாவம்யா.. அந்த பி.வாசு இவர சந்திரமுகிய வச்சி ஏமாத்திட்டாரு.. அஜித்து, எதுக்கு உன்னை எல்லாரும் தலன்னு சொல்றாங்க??


அஜித்: ஏற்றி விடவும் தந்தையும் இல்லை.. ஏந்தி கொள்ள தாய்மடி இல்லை.. என்னை நானே சிகரத்தில் வைத்தேன்... அதனால் உனக்கென்ன??



கவுண்டரு: டேய் ஜிம்பலக்கடி பம்பா.. எனக்கென்னவா?? அந்த பாட்ட கேட்டு வூட்டுக்கு போற வழியெல்லாம் எவனாவது எதாவது கேட்டா, உனக்கென்ன்னு கேட்டு தர்ம அடி வாங்குனது எனக்கு தான் தெரியும்.. இந்த ஆல்-இன்-ஆல் அழகுராஜா இதுவரைக்கும் அவன் பொண்ஜாதி கிட்ட அடியே வாங்குனதில்ல.. ஆனா (குமுறுகிறார்) அவ அன்னைக்கி நைட் ஏதோ கேக்க, நான் உன்னால உனக்கென்ன உனக்கென்னனு சொல்லி மொத்து மொத்துனு அடி வாங்கிட்டேன்டா ஜெல் தலையா (அழுகிறார்)



டீ.ஆரு: விடுங்க சார்.. இந்த வரி கூட தாங்கிக்கலாம்.. ஆனா சொன்னாரு பாரு இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன.. ஏழு கடலும் என் பெயர் சொன்னால் உனக்கென்னனு.. தம்பி.. கடல் பேசி நீ கேட்டுருக்கியா?? அது உஸ் உஸ்னு உயிருள்ள வரை உஷானு தான் சொல்லும், என்னை மாதிரி... உன் பேர சொல்லாது... இந்த உடம்ப வச்சிகிட்டு உன்னால இமயமல மேல நடந்து கொடி நட முடியுமா??


கவுண்டரு: டேய் தாடி.. உன் மொக்க தாங்காம இங்க தான் எல்லாரும் உஸ் உஸ்னு சொல்றாங்க.. நிறுத்துடா!!


பாப்பைய்யா: உடம்ப பத்தி யாரு பேசுறாங்கனு பாருங்க.. இது அடுக்குமா?? அவருக்கு வயித்துல தான் தொப்ப.. உமக்கு உடம்பெல்லாம் தொப்பய்யா...


டீ.ஆரு: (தீடீரென்று டென்சன் ஆகி, சட்டையை தூக்கி, வயிற்றை அடித்து) பாருங்க சார்.. அடுத்த படம் கருப்பனின் காதலிக்காக, வெயிட் குறைக்கிறேன்.. ஜிம்க்கு (GYM) போறேன்..


கவுண்டரு: (ஷாக்காகி) டேய் டேய் டேய் ஓவர்டா.. ஜிம்க்கு போயி ஸ்கிப்பிங் (SKIPPING) ஆடுறியா??


டீ.ஆரு: யார் சார் அந்த ஆமிரு, சூரியா?? சிக்ஸ்-பேக்கா?? (SIX PACK) நான் வைக்கிறேன் சார் ஏய்ட்-பேக்.. (EIGHT PACK) (வயித்த குத்தி) நம்பிக்கை வைங்க... வரான் சார் இந்த டீ.ஆரு.. யூத்தெல்லாம் நோ-மோரு..


கவுண்டரு: அய்யோ ராமா ராமா.. நம்ம ஊருக்கு நாய் புடிக்கற வண்டி மட்டும் வரட்டும்... உனக்கு இருக்கு அன்னைக்கு கச்சேரி...


பாப்பைய்யா: மக்களே.. நீங்களே பாருங்க.. நாங்க ஒரு ஷோ ஆரம்பிச்சி மத்தவங்கள கலாய்க்கலாம்னு இருந்தோம்... ஆனா இவரோ எங்களுக்கு வேல வைக்காம அவரே கலாய்ச்சிக்கிறாரு.. சூப்பருலே.. தம்பி அஜித்து.. நீங்க சாமியாரா ஒரு படத்துல நடிச்சீங்களே?? அது என்ன??



அஜித்: கடவுள்... நான் கடவுள்..


டீ.ஆரு: இப்ப எதுக்கு இந்த பன்ச்?? படமே ஒரு மொக்க.. நீ இத சீரியசா பேசியே ஊரு சிரிச்சது...


கவுண்டரு: உனக்கு மனசாட்சினு ஒண்ணு இருந்துருந்தா அந்த படத்துல நடிச்சிருப்பியா?? நெஞ்ச தொட்டு சொல்லு நீ கதை கேட்டேன்னு? ஏன்டா, ராமர் வேசம் போட்டுகிட்டு வந்தீயே.. வில்லன கொல பண்ண அம்பு, வில்லு யூஸ் பண்ணி இருந்தா கூடா சகிச்சிக்கலாம்.. ராமரு எந்த ஊருல துப்பாக்கிலா யூஸ் பண்ணி இருக்காரு?? இத மட்டும் பா.ஜ.க, ஹிந்துட்வா அமைப்புகள் பார்த்து இருந்தாங்க, மவனே நீ கைமா தான்..



பாப்பைய்யா: அந்த படம் பார்த்து அவங்க உயிரோட வந்தா தானேய்யா?? மொத பாதியிலே மர்கயா தான்..



அஜித்: வித்தியாசமா பண்ணலாம்னு நினச்சோம்.. அது இப்டி ஆகும்னு யாருக்கு தெரியும்??



டீ.ஆரு: வித்தியாசமா? உன்ன அந்த இரண்டு எழுத்து இயக்குனர் அவர் படத்துல இருந்து, சில பல கசமுசாக்கள் நடத்தி உன்ன தூக்குனதாலே தான் நீ அவருக்கு பல்ப் தரணும்னு அவசர அவசரமா நடிச்ச?? ALL-DETAILS I KNOW…



பாப்பைய்யா: ஆனா பல்ப் ஃபாக்டரியே (BULB FACTORY) வாங்குனது இவர் தானே?? அந்த படத்துல நீ நடிச்சிருந்தா, அரை மணி நேரம் தான் ஹீரோ வருவாருலே, அதுனால உன் ரசிகர்கள் அதெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க.. அப்றோம் தொப்பய வச்சிகிட்டு உம்மால யோகாசனம்லா பண்ண முடியுமா?? ’தல’ கீழா நின்னா, தொப்ப சும்மா அதிரும்லே...



அஜித்: ஹே... நான் கீழ இருந்தாலும், இறங்கி போறவன் இல்ல, ஏறி போறவன்..



கவுண்டரு: மகனே.. நீ இன்னொரு வாட்டி பன்ச் சொல்றேன்னு மொக்க போட்ட, உன்ன மேடைல இருந்து கீழே இறக்கிடுவோம்... அப்றோம் எல்லாரும் உன்மேல ஏறிப்போவோம்.. பீ கேர்ஃபுல்.. (BE CAREFUL)



டீ.ஆரு: நல்ல வேள.. வில்லன் படத்துல கிரண் கூட இவர சட்டையோட ஆட விட்டாங்க.. இல்லனா இவர் தொப்ப பெருசா இல்ல கிரண் தொப்ப பெருசான்னு போட்டி வைக்கலாம்..



அஜித்: ஹே.. ஓவரா கலாய்க்காதீங்க.. நான் தனி ஆள் இல்ல..



டீ.ஆரு: உன் வெயிட்ட பார்த்தாலே தெரியுதே, நீ தனி ஆளு இல்லனு.. அதான் உன் ஃபேன்ஸ் தல எப்பவுமே வெயிட்டுன்னு சொல்றாங்களா??


அஜித்: 690 உயிர்களின் ஆன்மா நான்...


பாப்பைய்யா: யாருய்யா அவங்க?? உன் படம் பார்த்து செத்துபோனவங்களா?


அஜித்: இந்த மழை நிக்கறதுக்குள்ள நீங்க பேசுறத நிறுத்தணும்..


கவுண்டரு: டேய்.. மொத கூலிங்-க்ளாஸ கிழத்து.. வெளிய வெயில் மண்டைய பொளக்குது... ஏன்டா, எந்த சிட்டுவேஷன்ல (SITUATION) எந்த பன்ச் சொல்லணும்னு வெவஸ்த இல்லையா உனக்கு??


அஜித்: ஹே.. அத்திப்பட்டி, தெரியுமா??


கவுண்டரு: ஐயோ... ஏற்கனவே ஒருத்தன்கிட்ட நான் வட்டிப்பட்டி கேக்க போயி, அவன் குடும்பமே பிரிஞ்சி போயி, என்ன அக்கு வேறா, ஆணி வேறா பிரிச்சிட்டான்.. இதுல இப்ப அத்திப்பட்டி வேறயா?? ஆள வுட்றா சாமீ...



அஜித்: உங்களுடைய மாமன், மைத்துனன், தாய், தந்தை....



பாப்பைய்யா: அய்யா.. போதும்.. எங்களால முடில.. இத்தோட முடிச்சிக்கலாம்.. இல்ல நீ பேசுவேன்னு அடம்பிடிச்சா உன் உச்சரிப்ப கேட்டு இங்க இருக்குறவங்களே ஓடிடுவாங்க.. பராசக்தி சிவாஜி பட சி.டி இருந்தா, தம்பிக்கு தாங்க.. அத பார்த்தாவது இனிமேல் இப்டி முயற்சி செய்ய மாட்டாரு... தம்பி இப்டி வசனம் பேசுறத விட்டுட்டு, நல்ல கதைகள கேட்டு நடிங்க.. ராஜூ சுந்தரம், செல்லா, சரவண சுப்பையா இவங்க நட்ப துண்டிங்க.. அப்ப தான் நீங்க தல.. இல்லனா எல்லாரும் தருதல தான் சொல்வாங்க..



அஜித்: பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர், மகன், மகள், சுற்றம்...



பாப்பைய்யா: இவரு நிறுத்த மாட்டாரு போல... எண்ட்-கார்ட்ட (END-CARD) போடுங்க.. போட்டாச்சா?? பிறவு சந்திப்போமா??? நன்றி!!

0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin