
மீண்டும் தரணி இயக்கத்தில் நடிக்கிறாராம் விஜய். இந்த செய்திதான் தற்போது இன்டஸ்ட்ரியை கலக்கிக் கொண்டிருக்கிறது.
விஜய் நடித்துவரும் வேட்டைக்காரன் அவரது 49வது படம். ஐம்பதாவது படத்தை சங்கிலி முருகன் தயாரிக்க எஸ்.ஏ. ராஜ்குமார் இயக்குகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் தரணி இயக்கத்தில் நடிக்க தீர்மானித்திருக்கிறாராம் விஜய்.
கில்லி, குருவி படங்களுக்குப் பிறகு இவர்கள் இணையும் இந்தப் படத்தை தயாரிக்கப் போகிறவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்கிறார்கள். விரைவில் இது பற்றிய அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்
0 comments:
Post a Comment