நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் விஜய் ரசிகர்


அரசியலுக்கு வருவதற்கான அத்தனை ஆயத்தங்களையும் திட்டமிட்டு நிறைவேற்றி வருகின்றார் நடிகர் விஜய் என்பதே சினிமா வட்டாரத்தின் சிறப்புச் செய்தி. அவரது அடுத்த கட்டப் படம் பற்றி யோசிப்பதிலும் பார்க்க அரசியல் நோக்கி அதிக கவனம் எடுக்கின்றாரோ என எண்ணும் வகையில் அரசியலின் பக்கம் அடிமேல் அடிவைத்து நகர்கின்றார் விஜய். அதை வெளிப்படையாகவே ஒத்துக்கொளவும் செய்கின்றார்.

அவரை இவ்வளவு தெளிவாகத் திட்டமிட்டு, அரசியலின் பக்கம் நகர்த்துவது அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர். கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் விஜய் மக்கள் இயக்கம் எனும் அமைப்புத் தொடங்கி வைக்கப்பட்டது.

இதன் தொடக்க விழாவில், தலைமை வகித்து உரையாற்றும் பேர்து,சந்திரசேகர் அதனை வெளிப்படையாகவே குறிப்பிட்டார். "அநியாயங்களை தட்டி கேட்கும் கதைகளைக் கொண்ட , பல புரட்சி படங்களை தயாரித்தவன் நான். இதற்காக என்னை யாரும் பாராட்டியதும் இல்லை, நாட்டில் ஏதும் மாற்றங்கள் நிகழ்ந்ததும் இல்லை. இந்தக் குறை என் மனதில் எழுச்சியாக இருந்தது. அதனால் என் மகனை நடிக்க வைத்து அதன் மூலம் எழுச்சியை கொண்டு வரலாம் என எண்ணினேன், நம்பினேன். அந்த நம்பிக்கையின் தோற்றமும் வளர்ச்சியும்தான் இன்று மக்கள் இயக்கமாக மாறி உள்ளது." என்றார்.

இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய இளைய தளபதி விஜய், பேசுகையில்,"நான் வேறு இரசிகர்களாகிய நீங்கள் வேறு அல்ல. என்னிடமுள்ள சமூக சிந்தனை ரசிகர்களாகிய உங்களிடம் உள்ளது. உங்களிடம் உள்ள சமூக கண்ணோட்டம் என்னிடமும் உள்ளது. இதனடிப்படையில், நீங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியங்களாலும், எனக்கும் நல்ல பெயர் வாங்கி கொடுக்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களின் வேண்டுகோளை ஏற்று தான் இந்த இயக்கத்தை ஆரம்பித்து உள்ளேன். உங்கள் ஆர்வத்தில் பிறந்துள்ள இந்த இயக்கத்தை தலைமை ஏற்று நடத்த ஆர்வமாக உள்ளது. நான் பிறந்த மண்ணிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என ஆசைப்படும் உங்களுக்கு, தலைவராக இருந்து பாடுபடுவேன்." என்றார்.

அவர் மேலும் பேசுகையில், " இது அரசியல் இயக்கமா எனக் கேட்கின்றார்கள் அரசியல் என்பது சினிமா கதை போன்றது அல்ல என்பதை நான் நன்கறிவேன். சினிமா ஒரு சிறிய வட்டம். ஆனால் அரசியல்அப்படியல்ல. அது ஒரு பெருங் கடல். அதில் இறங்கி நீந்துவதற்கு முன் அதன் ஆழம் தெரிவது அவசியம்.
தற்போது பல அரசியற் தலைவர்களின் புத்தகங்களை படித்து வருகிறேன், இன்னமும் படிக்க வேண்டும் எனும் ஆவலிலும் உள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்திலும், இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள், இலட்சம் ஆக முர்றும் போது, இந்த இயக்கம் அரசியற்கட்சியாக மாறும். அதற்கான காலம் எதுவென்று எனக்குத் தெரியாது. நீங்கள் மனது வைத்தால், அது விரைவில் நடக்கும் என்பது உண்மை. அப்போது, என் குடும்பம் என் தொழிலை விட இந்த கட்சியை பெரிதாக எண்ணி உழைப்பேன் என்பதை உறுதிபடத் தெரிவிக்கின்றேன்" என்றார்.

விழாவில் பல்வேறு பொதுப்பணித்திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. மேலும் பலருக்கு வேண்டிய பல் வேறு உதவிகள் வழங்கப்பட்டன.

1 comments:

Anonymous said...

இவன் காமெடிக்கு முடிவே கிடையாதா???? இவனுக்கு ஒரு வலைப்பூ வேற ...கேவலம்

Post a Comment

Blog Widget by LinkWithin