நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் விஜய் ரசிகர்

எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருட பிறந்த நாள் கொஞ்சம் விசேஷம்தான் விஜய்க்கு! அரசியல் துறுதுறுப்புகள் ஒருபக்கம். அதிரடி 50 வது படம் மறுபக்கம் என இந்த பிறந்த நாளில் கேள்வி கேட்க ஏராளமான விஷயங்களோடு பத்திரிகையாளர்களை சந்தித்தார் இளைய தளபதி.

பல வருடங்களாக பிறந்த நாள் கொண்டாடியிருக்கேன். ஆனால் இந்த வருஷம் ஸ்பெஷல். எப்படின்னா, கல்விக்காக இலவசமா கம்ப்யூட்டர் கொடுக்கணும்னு நினைச்சிருந்தேன். அது நடந்திருக்கு. எங்களோட கல்யாண மண்டபத்தை இப்போ பார்த்தால், ஏதோ மினி ஆஸ்பிடல் மாதிரி இருக்கு. செட்டிநாடு எல் சென்ட்டர் இலவச மருத்துவ முகாமை எங்க ரசிகர் மன்றத்தோட சேர்ந்து இங்கே நடத்துறாங்க. என்னோட ரசிகர்கள் கஷ்டப்பட்டு இதுக்கெல்லாம் ஏற்பாடு செஞ்சிருக்காங்க என்றவர் தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க துவங்கினார்.

வேட்டைக்காரன் பற்றி சொல்லுங்க?

படம் 75 சதவீதம் முடிஞ்சிருக்கு. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிவிடும். என்னோட 50 வது படத்தை பற்றி கேட்கிறாங்க. இந்த படத்தை சங்கிலி முருகன் தயாரிக்கிறார். யார் இயக்குனர்? யார் ஹீரோயின் என்பதெல்லாம் வேட்டைக்காரன் ரிலீசுக்கு பிறகு முறைப்படி அறிவிப்பேன். அதுவரைக்கும் பொறுத்துக்கோங்க.

அரசியல் கட்சி ஆரம்பிக்கிறதா ஒரு பேச்சிருக்கே?

ரசிகர்கள் தங்களோட சக்திக்கு மீறி பல நல்ல விஷயங்கள் செஞ்சிட்டு வர்றாங்க. அவங்களோட விருப்பம் நான் அரசியலுக்கு வரணும்னு இருக்கு. இது குறித்து நான் ஆலோசனை செஞ்சது உண்மைதான். ஒவ்வொரு மாவட்டமாக சென்று ரசிகர்களோட மட்டுமில்லே, மக்களோடவும் கலந்து பேசியிருக்கேன். அரசியல் கட்சி ஆரம்பிக்கிற விஷயத்திலே ரசிகர்களோட கருத்துக்கும் எனக்கும் முரண்பாடு இருக்கு. இருந்தாலும், இப்போதைக்கு இதை மக்கள் இயக்கமாக ஆரம்பிக்கலாம் என்று முடிவு செஞ்சிருக்கோம்.

உங்கள் ரசிகர்களை இனி தொண்டர்கள் என்று அழைக்கலாமா?

அவங்க எப்பவோ தொண்டர்களா மாறிட்டாங்க.

அரசியலுக்கு வரப்போறதா முடிவு பண்ணிட்டீங்க. பொது பிரச்சனைகளுக்காக போராடுவீர்களா?

கண்டிப்பாக தொண்டர்களோட சேர்ந்து நானும் போராட்டத்திலே முன்னாடி நிப்பேன்!

கட்சி ஆரம்பிக்கிறது சம்பந்தமா மிரட்டல், பாராட்டுகள் வந்ததா?

மற்றவங்க மிரட்டுற அளவுக்கு நான் ஒண்ணும் சீன் போடலியே?

இவ்வாறு பதிலளித்த விஜய், வடபழனி கோவிலில் 500 ஏழைகளுக்கு அன்னதானம் போட அவசரம் அவசரமாக புறப்பட்டார்

0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin