நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் விஜய் ரசிகர்
என் ஆண்டவர் 'இளைய தளபதி' 'அடுத்த சூப்பர் ஸ்டார்' விஜய் சந்திரசேகரனின் 50 ஆவது திரைப்படம் வெளி வர இருக்கும் நிலையில் இச்சொல் ஓவியத்தை அவரது பாத காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்

நான் இளைய தளபதி விஜய்யின் பரம ரசிகன் என்பது பலரும் அறியாத விடயம்.அவரைப் போல ஒரு சிறந்த நடிகர் இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்று நினைப்பவன் நான்.உலக நாயகனும் அவரே, நவரச நாயகனும் அவரே, சூப்பர் ஸ்டாரும் அவரே என்று வெறித்தனமாக இளைய தளபதியை நேசிக்கும் பக்தன்.விஜய் 'தலை' என்றால் அஜித்குமார் 'தறுதலை' என்று கங்கணம் கட்டி திரிபவன் (Facebook இல் இதே பெயரில் ஒரு குழுமம் உள்ளது ;)).அவருடைய எல்லா படத்தையும் தவறாது 10 முறையாவது (கண் இமைக்காமல்) பார்ப்பவன்.

நம்ம இளைய தளபதி அவருடைய திரைப்படங்களுக்கு அருமையான தமிழ் பெயர்களை சூட்டி நம் எல்லோரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.அவருடைய எதிர்கால திரைப்படங்களுக்கு பெயர் சூட்டும் பொறுப்பு எனக்கு கிடைக்க வேண்டுமென்பது என் நெடு நாள் ஆசை(ஒரு சின்ன நப்பாசை தான்).அதற்காக இப்போதே சில பெயர்களை யோசித்து வைத்திருக்கிறேன்.

அவருடைய படங்களுக்கென்றே தனியான பட்டியல் ஒன்றை தயார் பண்ணி அந்த பட்டியலை அழகாக categorize பண்ணி அழகு பார்த்திருக்கிறேன்.

இதோ அந்த பட்டியல்,

'திருப்பாச்சி', 'சிவகாசி' போன்ற ஊர்களின் பெயர்களின் வரிசையிலே- 'திருச்சி', 'செங்கல்பட்டு', 'கோயம்புத்தூர்', 'கும்பகோணம்', 'கொடைக்கானல்', 'ஈரோடு', 'நாகர்கோவில்', 'பொள்ளாச்சி', 'விருதுநகர்', 'எர்காடு' ஆகிய ஊர் பெயர்கள் அவருடைய திரைப்படங்களுக்கு மிகவும் பொருந்தும் என எண்ணுகிறேன்.இலங்கை வாழ் தமிழ் மக்களுக்காக அவர் தன்னை மிகவும் அர்ப்பணிப்பதால்(இந்த விஷயத்தில் அவருக்கு அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்) அவர்களுக்கென்றே seperate ஆக பெயர்களை தயார்பண்ணி வருகிறேன்.இந்த அடிப்படையில் -'வெள்ளவத்தை', 'ஹட்டன்','நுவர எலிய', 'கம்பளை' ஆகிய சில பெயர்களையே என்னால் யோசிக்க முடிந்தது.இவை எல்லாவற்றிலும் என்னுடைய favourite, 'ஒட்டுசுட்டான்' என்ற பெயர்.நம் தளபதி அவர் மீது 'ஒட்டிய' இழுக்கை எவ்வாறு 'சுடுகிறார்' என்பதே அந்த படத்தின் கதையாக அமையும் .படத்தின் climax காட்சி ஒட்டுசுட்டான் தான்தோன்றியீச்சரத்துக்கு முன்னால் இடம்பெறுவது போல screenplay அமைக்கப்படும்!(இலங்கை படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான கடும் மோதல்களுக்கு மத்தியில் எவ்வாறு படப்பிடிப்பு இடம்பெறும் என்று சிலர் கேட்பது புரிகிறது.அது தான் நம் தலைவரின் வெற்றியின் ரகசியம்!)

இதை தவிர 'குருவி' யை ஒத்த பெயர்களாக காக்கா('காகம்' என்ற தூய பதம் அவ்வளவு எடுப்பாக இருக்காது), 'கழுகு', 'மயில்', 'வான்கோழி', 'வாத்து', 'புறா', 'புளினி' (இந்த பறவை எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியாது) ஆகிய பெயர்களை யோசித்து வைத்திருக்கிறேன்.இந்த பெயர் கொண்ட படங்களை எவ்வளவு பிரமாண்டமாக எடுக்கலாம் என்று சற்று யோசித்து பாருங்கள்.Possibilities ஐ சற்று யோசியுங்கள். 'குருவி' என்று பெயர் வைத்ததற்கே இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு பறந்து அங்கேயும் பறந்து பறந்து சண்டை இட்ட நம் தலைவர் 'கழுகு' என்று பெயர் வைத்தால் எங்கே எல்லாம் பறப்பார்?ஆகாய விமானமோ, அதற்கான எரிபொருளோ எதுவுமின்றி தன்னிச்சையாக, தன் 6 pack உடம்பின் உதவியுடன் நேரே அமெரிக்காவுக்கே பறந்துவிடுவார்.அங்கு Empire State Building இன் மேல் மாடியிலிருந்து கீழே பறந்து வந்து சண்டையிடுவது போன்று காட்சியமைப்பு அமைக்கலாம்(தளபதிக்கு பறப்பதற்காகவே தேசிய விருது கிடைக்கும்!)

0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin