
கோலிவுட்டில் இப்போது பரபரப்பாக பேசப்படும் விஷயம், ஜூன் 22 தேதி இளைய தளபதி தனிக்கட்சி தொடங்கப் போகிறாரா என்பதே. கட்சி தொடங்கும் முன்னர் செய்ய வேண்டிய காரியஙக்ளை மறைமுகமாக செய்ய முடியாது. அபப்டி எந்த முன்னேற்பாடும் இன்றி கட்சி தொடங்கவும் முடியாது. அதனால் அந்த செய்தியை நமப முடியவில்லை.
அதற்கடுத்து அவரது 50வது படம் பற்றிய தகவல்கள். ஜெயம் ராஜா, கே.எஸ்.ரவிக்குமார், சித்திக், பேரரசு எனப் பலரின் பெயர்கள் அடிபட்டன. இறுதியாக முடிவான செய்து. எஸ்.பி ராஜ்குமார் அவர்கள் கதை, திரைக்கதை, வசனம் எழுத இயக்கம் மட்டும் பேரரசு.
பேரரசு என்றவுடன் பொதுமக்கள் மத்தியில் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சில அதிருப்தி எழக்கூடும். ஆனால் அவரின் இயக்கத்தில் இருக்கும் வேகத்தை மறுக்க முடியாது. நீண்ட ஆலோசனைக்குப் பின் இந்த முடிவுக்கு வந்திருக்கும் தளபதியை இந்த முறையும் பேரரசு காப்பற்றுவார் என்று எதிர்பார்க்கலாம்.
படத்தின் பெயர் இன்னும் முடிவாகாத நிலையில் கதாசிரியரின் சஜெஷன் தான் “உரிமைக் குரல்”. வேட்டைக்காரனின் முடிவை வைத்து பெயர் மாறக்கூடும் என்பது என் கணிப்பு. ஆனால் உரிமைக்குரலை பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். தமன்னா தான் ஹீரோயின் என்றும் சொல்கிறார்கள். இன்னும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் பல விதமான செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இதையும் கிண்டலடித்து உடனே எஸ்.எம்.எஸும் மெயிலும் டைப் பண்ணப்போகும் தலைகளே, முடிந்தால் உங்கள் 50வது படத் தகவல்களை எனக்கு அனுப்புங்கள். அடுத்தவனை பற்றி புறம் பேசுவதை விடுங்கள். அதுக்குத்தானே சொல்லி இருக்காங்க.. “காய்ச்ச மரம் தானே கல்லடிப்படும்”
0 comments:
Post a Comment