
தொடர்ந்து மூன்று படங்கள் சரியாகப் போகாததால் துவண்டிருக்கும் விஜய் இப்போது பார்த்துப் பார்த்து எடுத்து வரும் படம் வேட்டைக்காரன்.
ஏவிஎம் பாலசுப்ரணியன் தயாரிக்கும் இந்தப் படம் விஜய்யின் 49 வது படம். தெலுங்கு ஹாட் அனுஷ்கா ஜோடியாக நடிக்கிறார்.
இயக்குநர் தரணியின் உதவியாளர் பாபு சிவன் இயக்கும் இந்தப் படத்தின் இரண்டாவது கட்டப்படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நடந்து வருகிறது.
இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்து வருகிறார். அனைத்துப் பாடல்களையும் இசையமைத்துக் கொடுத்துவிட்டாராம்.
இந்தப் படத்தில் விஜய் அறிமுகப்பாடல் குறித்து ஏக பில்ட் அப் கொடுத்து வந்தார்கள். இந்த நிலையில் அந்தப் பாடல் இன்று இணையதளங்களில் கசிந்து விட்டது.
'வேட்டைக்காரன் பரம்பரைடா...' என்று ஆரம்பமாகும் இந்தப் பாடல், வழக்கமான விஜய் பட பாடல் போலவே அமைந்துள்ளது. குத்தாட்டப் பாடல். இந்த வகைப் பாடல்தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என விஜய் கூறிவருவதால், அவரது டேஸ்டுக்கேற்ப இந்தப் பாட்டை போட்டிருக்கிறார் போலிருக்கிறது விஜய் ஆண்டனி.
0 comments:
Post a Comment