
விஜயின் தந்தை தூக்கி நிறுத்தவில்லையென்றால் அவறில்லை பின்புலத்தோடுத்தான் வந்தார் என்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி. வைப்போம்
தந்தையின் ஆதரவு யாருக்குத்தான் இல்லை? என்றும் இரண்டாவது விமர்சனத்துக்கு அவருக்கு பின்புலம் இருந்தது அவர் செய்த புன்னியம் அதற்க்கு நீங்கள் ஏன் அழுகிறீர்கள் என்று மேலோட்டம்மாக பதில் சொல்லிவிட்டு போய்விடலாம் ஆனால் அலசி ஆராய்வதற்க்கும் அடித்துச் சொல்லி நியாயம் பேசுவதற்க்கு எராளமான விசயங்கள் இருக்கின்றன அவைகளை கொஞ்சம் தெளிவாக பேசிடுவோமே
அறிமுகமாகிய படங்கள் தந்தை இயக்க்கிய படம்தான் ஆனால் நடித்த முதல் படம் தோழ்வியை கொடுத்தது அறிமுகமகிய படங்களுக்கு வராத விமர்சனங்களே கிடையாது ஒரு இல பத்திரிகையில் "இந்த முஞ்சியை வைத்துக்கொண்டு நடிக்கவந்துட்டான் என்று ஒரு சில பத்திரிகைகள் விமர்சித்தன
இப்பொழுது அது எல்லவற்றையும் தனது கடின உழைப்பினால் முறியடித்து அவ்வாறு விமர்சித்து எழுதிய பத்திரிகைகள் இப்போது புகழ்ந்து எழுத வரிகள் இன்றி தவிக்கின்றன
எத்தனையோ இயக்குனர்களுக்கு வாழ்வு கொடுத்தர் அந்த இயக்குனர்களே கூறியிருக்கிரார்கள் விஜய் நடித்க அதிக படம் அறிமுக இயக்குனர்களுடந்தான் உதாரனமாக குஷி போக்கிரி சிவகாசி திருப்பாச்சி என்று பெரிய இயக்குனர்களுடன் இனையாமல் அறிமுக இயக்குனர்களுடன் அதிகம் இனந்து வெற்றி வாகை சூடினார் என்றால் மிகையாகது
விஜய் தனது வெற்றிக்கு தனது தந்தைக்கு முக்கிய பங்கு உண்டு என்று கூறி வருவதுண்டு நிச்சையமாக அவரது தந்தைக்குக் முக்கிய பங்கு உண்டு.
பின்புலம் இல்லாதவர் என்கிற காரணத்திற்காக ஒருவர் ஒதுக்கப்படுவது எப்படி தவறான ஒன்றோ அதே போல இன்னாரின் வாரிசு என்கிற அறிமுகம் இருக்கிற காரணத்திற்க்காவும் ஒருவருடைய வெற்றி விலாசம் குறித்து மதிப்பிடுவதுவும் தவறான ஒன்றுதான்! ஏனெனில் வெற்றிக்கு தேவை தன்னம்பிக்கை,விடாமுயற்சி கடின உழைப்பு போன்ற காரணிகள்தானே ஒழிய அறிமுகங்களோ பின்புலங்களோ அல்ல
எந்த வித பின்புலமும் இன்றி வாழ்வின் அடிமட்டத்திலிருந்து எம் ஜி ஆர் ரஜினி போன்ற சாமனியர்கள் அதே கடின உழைப்பால் வெற்றியின் சிகரங்களை தொட்டனர் அதே கடின உழைப்புடன் வேறொரு மட்டத்திலிருந்து விஜய் என்கிற இளைஞன் அதே வெற்றி சிகரத்தை தொட முயற்சித்தபோது அந்த சிகரம் அதை வேண்டாம் என்று சொல்லவில்லை சிலர் அதை ஏன் விமர்சிக்கின்றனர்?
இதற்க்கு ஒரே வரியில் பதில் சொல்வதனால் அவர்களுடைய எரிச்சல்களுக்கு வேண்டாத வெறுப்பு கள் ஏதேனும் கரணமாக இருக்கலாம் சிகரங்களும் சரி வெற்றிகளும் சரி எப்போதும் கேட்பது தன்னம்பிக்கை விடாமுயற்சி கடின உழைப்பு இவைற்றைதான்.
எந்த ஊர் யார் பையன் வாரிசா வசதியா என்ற கேள்விகளை எல்லம் என்றும் அவை கேட்பதில்லை. ஒருவேளை முதல் இரண்டு கேள்விகளை அவை கட்டாயமாக கேட்டிருந்தால் எம் ஜி ஆர் ரஜினியும் தமிழிழ் சிகரங்கள் தொட்டிருக்க முடியாது அடுத்த இரண்டு கேள்விகளை கேட்டிருந்தாள் விஜயும் இன்று இந்த நிலையை எட்டிருக்க முடியது
பெற்றோர்களோ, உடன்பிறந்த சகோதரர்களோ உற்ற நண்பர்களோ நம் உயர்வுக்கு உறுதுனை புரிவதை தவறு என்று நாம் எப்படிக்கூற முடியும்?
எம் ஜி ஆரின் வளர்ச்சியில் அவரது அண்ணண் எம் ஜிர் சக்கரபாணியின் பங்கு அதிகம்.
தந்தையில்லாத எம் ஜிஆரை தந்தை ஷ்தானத்திலிருந்து வளர்த்தெடுத்து முதல் அவருக்கு கம்பனி கம்பனியாய் ஏறியிறங்கி வாய்ப்புகள் கேட்டது .
எம் ஜி ஆர் நடிகரானதும் அவருக்காக கதைகள் கேட்டது, கால்ஷீட் பார்த்தது என்று எம் ஜி ஆருக்கு அனைத்துமாய் இருந்திருக்கிறார் எம் ஜி சக்கரபாணி. தமிழ் சினிமவில் அப்போது இவரை பெரியவர் என்றும் எம் ஜி ஆரை சின்னவர் என்றும் அழைக்கும் வழக்கமே இருந்தது என்றால் சக்கரபானி அவர்கள் எம் ஜி ஆருக்கு எந்தளவு உறுதுனையாய் இருந்திருக்கிறார்
சிவஜிராவ் என்ற இளைஞன் ரஜினிகாந்த் ஆனது முதல் சூப்பர்ஷ்ட்ர் ஆனது வரைக்கும் அவரது வளர்ச்சியில் எங்கும் நண்பர்களின் ஆதிக்கம் குடும்பத்தில் இருந்ததைவிட நண்பகள் கூட்டத்தோட எப்போதும் இருந்த சிவஜிராவின் திறைமையை கண்டுகொண்டு அதை அவருக்கு முதன்முதலில் உனர்ச்சியது ராஜபகதூர் என்ற நண்பன். உணர்த்தியதோடு நில்லாமல் தன் மனைவியின் நகைகளை விற்று சிவாஜியை சென்னை நடிப்புக் கல்லூரிக்கு அனுப்பினார் ராஜ்பகதூர். அத்தோடு மாத்மாதம் பெற்ற பிள்ளைகளுக்கு பணம் அனுப்புவது போல் தன் சம்பளத்தில் ஒரு பகுதியை சிவாஜிராஜாவுக்கு அனுப்பி உதவினார் சென்னை வந்த இடத்தில் சிவாஜிக்கு அனைத்துமாய் இருந்து அரவணைத்தது கல்லூரி நண்பர்கள்தான் இருப்பிடம் இல்லாமல் தவித்த சிவாஜிராவை பெரிய நடிகர் ஆகும்வரை தன் இல்லத்தில் தங்கவைத்து ஒரு கல்லூரி நண்பரே.
பின் தன்னுடன் சிறு சிறு வேடங்களில் நடித்த ரஜினியின் மீது மிகுந்த அக்கறை கொண்டு இயக்குன்ரிடம் அவரது காட்சிகளை அதிகபடுத்த சொன்னதில் நல்ல பாத்திரங்களை பெற்றுத்தந்ததில் கமலகாசன் என்ற உலக நாயக நண்பனுக்கு பங்குண்டு இப்படி எம் ஜி ஆரின் உயர்வில் அவரது சகோதரரும் ரஜினியின் உயர்வில் அவரது ந்ண்ப்ர்களும் இருந்தது போல் விஜயின் வள்ர்ச்சியில் அவரது தந்தை அக்கறையொடு இருக்கிறார் இது எந்த வகையில் தவறு?
எல்லோருக்கும் அவரகளது வாழ்வில் யாரவது
ஒருமனிதர் உந்து சக்தியாய் உறுதுனையாய் இருப்பார் அது தாயோ தாரமோ அண்ணனோ தம்பியோ தங்கையோ நண்பனோ எவரும் இருக்கலாம் விஜய்க்கு அப்படியொரு மனிதராக அவரது தந்தையே கிடைத்திருக்கிறார், அவ்வளவுதான்.
பின் புலம் இல்லாமல் வளர்ந்தேன் என்று இங்கு யாரெனும் சொல்லிக்கொண்டால் அது நிச்சயம் பொய்யாகத்தான் இருக்க முடியும் அல்லது அப்படிப்பட்ட அக்கறையுள்ள மனிதர்களை சம்பாதிக்க சம்பந்தப்பட்டவர்களின் குனாதிசயமேகூட ஒரு தடையாக இருந்திருக்கலாம். விஜய் மட்டுமில்லை பின்புலமே இல்லாமல் யாருமே இந்த உலகில் வாழமுடியாது என்பதே உண்மை
சக்கரபாணியில்லாத எம் ஜி ஆர் ராஜபதுர் இல்லாத ரஜினிகாந் இவர்களை விடுங்கள் இந்தியாவே கொண்டாடும் அதிசய மனிதர் அப்துகலமின் வாழ்க்கையிலே அவரை ஏற்றிவிட்ட எணிகளாய் எரளாமன மனிதர்கள் இருக்கிறார்கள் . திறமையான அப்துகலாமை தன் நகைகளை எல்லாம் விற்று படிக்கவைத்தவர் அவரது சகோதரி அதை அனுமத்திதார் அப்துகலாமிற்க்கு வழிகாட்டினார் அவரது கணவர். ஆக மச்சான் துனையோடு மலையேறியவர்தான் அப்துகலாம்
சதனையளர்களை எல்லம் விடுங்கள் நான் நீங்கள் உள்ளிட்ட ந்ம்மில் கூட பெற்றோர் ,மற்றொர் உதவியில்லமல் உயந்தவர்கள் வாழ்ந்தவர்கள் யாரேனும் இருக்க முடியுமா? நிச்சயம் எவரேனும் ஒருவரது பங்களிப்பு உங்களின் ஆக்கத்தில் அடங்கியிருக்கும்
இன்றும் வெற்றி பெறுகின்ற அண்களுக்கு பின்னால் பெண்கள் மட்டுமில்லை பல ஆண்களும் முகம் தெரியாமல் அடங்கியிருக்கிறார்கள் ஒரே வித்தியாசம் விஜய்யின் தந்தை சந்திரசேகரர் முகம் தெரிந்து அடங்கியிருக்கிறார் காரணம் அவர் ஊரறிந்த இயக்குனர் என்பதை விட வேறு என்னவாக இருக்க முடியும்? தங்கள் பிள்ளைகளை வாழ்க்கையில் நிலைப்படுத்துவது உயர்த்துவதும் எல்லாம் பெற்றோர்களின் கடமைதான். இது கலையுலகம் சாரத பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படிக்க விரும்பும் படிப்பிற்க்கும் உதவுகிறார்கள். விஜய் விரும்பிய நடிப்பிற்க்கு உதவினார், இதுதன் வித்தியாசம்
மற்றபடி பிள்ளைகளுக்காக படிப்பது பரீட்சை எழுதுவதும் வெற்றி பெறுவதும்பெற்றோர்களுமில்லை விஜய்க்காக நடிப்பதும் தோழ்விகளை தாங்குவது வெற்றிபெறுவதும் எஷ் ஏஷி யுமில்லை. பயிலகத்தில் சேர்ப்பதும் கட்டணங்கள் கட்டுவதும் அவ்வப்போது நம்மை இயக்குவதும் மட்டுமே பெற்றோர்களின் வேலை அதே போல் விஜயை சினிமாவில் அறிமுகம் செய்ததும் அதற்க்காக கொஞ்சம் பணம் போட்டதும் அவ்வப்போது அவரை இயக்கியதும் மட்டும்தான் எஷ் ஏஷியின் வேலை . படித்து வெற்றிபெற்றதும் நடித்து வெற்றிபெற்றதும் நாமும் விஜயும்தானே!!!